வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்' வாழ்த்துச் செய்தியில் போரிஸ்;

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் பொதுமக்கள் வரும் கிறுஸ்துமஸ் விடுமுறைக்காலத்தில் அதிகமான வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது செய்தி அடங்கிய காணொளியில் அவர் “Brexit” என்ற வார்த்தையைத் தவிர்த்திருந்தார்.

இந்த விழாக்காலத்தில் மட்டுமல்லாமல், பொதுவாகவே யாருடனும் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம் என்று அவர் நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
பிரிட்டனின் எதிர்காலம் Brexit விவகாரத்தால், கடுமையாக பிளவுபட்டிருக்கிறது.
அண்மைய பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.
அடுத்த மாத இறுதிக்குள் Brexit விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று மேலும் கூறியுள்ளார்.

No comments