ஈஸ்டர் தாக்குதலில் சகோதர்கள் பலி! அறக்கட்டளை தொடக்கி உதவிசெய்யும் பிரித்தானியர்!

இலங்கையில் தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்களின் பெயரில் பிரிட்டன் இளைஞர் அறக்கட்டளை தொடங்கி இதுவரை  8.2 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளார்.
2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்

அதே நாளில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில், பிரிட்டனை சேர்ந்த டேனியல் மற்றும் எமிலி ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் வேதனை அடைந்த அவர்களது மூத்த சகோதரர் டேவிட் இலங்கையில் சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக ஒரு அறக்கட்டளை தொடங்கினார். அதன் மூலம் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க செலவழித்து வருகிறார்.


அறக்கட்டளை மூலம் பெறப்படும் பொருட்களை விமானம் மூலம் இலவசமாக இலங்கையின் விமான சேவையும் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது டேவிட் தொடங்கியுள்ள அறக்கட்டளைக்கு பலர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இதுவரை அவர் 3,50,000 இங்கிலாந்து பவுண்டுகள் நன்கொடையாக பெற்றுள்ளார். அதாவது ´இலங்கை பண மதிப்பில் சுமார் 8.2 கோடி ரூபாய் ஆகும். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். கடைசியாக அவர் 100 ட்ரோலி கட்டில்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.

No comments