கோத்தா ஆட்டம் ஆரம்பம்: ராஜிதவை கைது செய்ய உத்தரவு

“வெள்ளை வான்” ஊடக சந்திப்புத் தொடர்பில் பிடியாணை பெற்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் சிஐடி பணிப்பாளருக்கு இன்று (24) சற்றுமுன் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன தன்னை கைது செய்வதை தடை செய்யக் கோரி முன் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதுகுறித்த விசாரணை 30ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அவருக்கு நாட்டை விட்டு வெளியேற நேற்று தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளை வான் ஊடக சந்திப்பில் ராஜித சேனாரத்ன எழுதிக் கொடுத்த பொய்களை தாம் வெளியிட்டதாக வெள்ளை வான் சாரதிகள் என்று அறியப்படும் இருவரும் சிஐடியில் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments