ரணிலுக்கு தலையிடி?


பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவுள்ளதால் எதிர்க்கட்சி  தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய  தேசிய கட்சிக்குள் பாரிய நெருக் கடி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதால் உடனடியாக அவர்  எதிர்க்கட்சி  தலைவராக நியமனம் பெறுவார்.
எனினும்  ரணில் விக்ரமசிஙக  எதிர்க்கட்சித்  தலைவர் பதவியையும்  ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளது.
சஜித் பிரேமதாச தரப்பினரான  நளின் பண்டார  ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
எனினும்  ரணில் ஆதரவு தரப்பினர்  எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று   திட்டவட்டமாக கூறிவருகின்றனர். இந்த நிலையிலேயே   கட்சிக்குள் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் அவருக்கு வழங்கமுடியாது. அவற்றுக்கு உடன்படாவிட்டால் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் மாற்று அணியொன்றைத் திரட்டி, புதிய கட்சியை ஆரம்பித்து, எமது அரசியல் பயணத்தின் மற்றொரு அத்தியாத்தை ஆரம்பிப்போம். அதனை  தவிர எமக்கு வேறு தெரிவுகள் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ  ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எனினும்   எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று  ரணில் விக்ரமசிங்க ஆதரவு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்த நிலையிலேயே  கட்சிக்குள்  தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி  தொடர்பில் பாரிய   நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments