கோத்தா விவகாரம்: பொறுத்திருக்கிறது தமிழரசு!


தென்னிலங்கை அரசியல் போக்கு தொடர்பில் தமிழரசுக்கட்சி பொறுத்திருந்து பார்த்து முடிவெடுக்க தீர்மானித்துள்ளது.

இதனிடையே இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் மேசியக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்திக்க முயன்றிருக்காமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராயபக்சா ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று முன்தினம் உடனடிப் பயணமாக கொழும்பு வந்து புதிய ஜனாதிபதியை சந்தித்து உரையாடியதோடு இந்தியாவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வாறு பயணித்த இந்திய அமைச்சர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்திக்க விரும்புவதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் ஊடக அழைப்பு விடப்பட்டது. குறித்த நேரம் கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலையில் இருந்தமையினாலும் இந்திய அமைச்சரின் இரத்து செய்யப்பட்டதாகவும் சந்திப்பு இடம்பெறாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளது.

இன்னொருபுறம் சம்பந்தன் கோத்தாவுடன் சந்திப்பிற்கு முயற்சித்துவருகின்ற நிலையில் தமிழரசுக்கட்சியின் மௌனம் நடைமுறைக்கு வந்துள்ளது.

No comments