டெலோ நாடகம் உச்சத்தில்!


கூட்டமைப்பின் பங்காளியான டெலோவின் தலைமையின் முடிவுக்கு மாறாக அதன் யாழ்.கிளை தனித்து பயணிக்க திட்டமிட்டுள்ளது.

எனினும் இந்நகர்வு பின்னணி பலத்த சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.

சஜித்திற்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதுடன் அதன் தலைவர் இன்று சாவகச்சேரியில் சிறுபான்மை மக்களது ஆதரவு இன்றி வெல்ல முடியுமாவென கோத்தாவிற்கு சவாலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் டெலோவின் யாழ்.மாவட்ட கிளை முடிவு சிறீகாந்தாவின் தூண்டலில் நடந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதென்ற பேரில் தமிழ் மக்களை குழப்ப நடத்தப்படும் நாடகமென சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 2015ம் ஆண்டைய நாடாளுமன்ற தேர்தலின் போது சிறீகாந்தா கல்லாகட்டியதாக விமர்சனங்கள் எழுந்திருந்தது.

இதனை முன்னாள் முதலமைச்சர் தனது அறிக்கையில் மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையினில் டெலோவின் ஒரு பிரிவினரது நாடகம் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றது.


No comments