ஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ

ஈபிஆர்எல்எவ் இனை தொடர்ந்து டெலோ இயக்கத்திலிருந்து தனது கட்சிக்கு ஆட்களை இழுக்க தமிழரசு மும்முரமாகியுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தமிழரசு பக்கம் பாய்ந்துள்ள நிலையில் அடுத்து கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் முழுமையாக பாய்ந்துள்ளார்.

நேற்று மிகவும் இரகசியமான முறையில் வவுனியாவில் நடத்தப்பட்ட டெலோ கட்சிக்கூட்டத்தில் இவ்விவகாரம் முக்கிய பேசுபொருளாகியிருந்தது.
ரெலோவின் துணைத தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறீகாந்தா உள்ளிட்ட தலைமைக்குழுவின் 15 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தலைமைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது, இதில் பெரும்பாலான உறுப்பினர்கள், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க விருப்பம் வெளியிட்டனர். இதன் அடிப்படையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்றிரவு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

அப்போதே தமிழரசின் ஆட்பிடிப்பு விவகாரம் முக்கிய விடயமாகி கோடீஸ்வரன் மற்றும் டெனீஸ்வரன் உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments