எந்நேரமும் குண்டுவெடிக்கலாம்?


ஜனாதிபதி தேர்தல் முன்னராக பாரிய குண்டு தாக்குதல் ஒன்றை நடத்த கோத்தா அணி முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

கோத்தா மற்றும் நாமலுடன் தொடர்புபட்ட பாதாள உலக கும்பலொன்றை வைத்து அல்லது இராணுவ புலனாய்வு பிரிவை வைத்து இத்தாக்குதல் நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய தாக்குதல் தொடர்பில் ஜக்கிய தேசியக்கட்சி தேர்தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை தலைமைக்கு அறிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தோல்வி பயம் கோத்தா அணியினை அச்சமூட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையிலேயே பாரிய குண்டு தாக்குதல் ஒன்றை நடத்தி தெற்கு மக்களிடையே மீண்டும் புலி பயத்தை தோற்றுவித்து வாக்கு வங்கியை திரட்ட முற்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சந்திரிகா வருகை உள்ளிட்ட மாற்றங்கள் தெற்கில் தோற்றுவித்துள்ள சஜித் ஆதரவு அலை மற்றும் வடகிழக்கில் ஏகோபித்த சஜித் ஆதரவு நிலைப்பாடு என்பவையே கோத்தா தரப்பிற்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments