தொடங்கியது சந்திரிகாவின் குடைச்சல்?


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் பல்வேறு தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடாத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் பண்டார அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதலாவது கூட்டம் நாளை 8 ஆம் திகதி காலை வென்னப்புவயில் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது கூட்டம் மட்டக்களப்பிலும், 9 ஆம் திகதி அனுராதபுரத்திலும், 10 ஆம் திகதி கண்டி, மாத்தளை  ஆகிய இடங்களிலும், 11 ஆம் திகதி இரத்தினபுரியிலும், 12 ஆம் திகதி கேகாலையிலும் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட குமாரவெல்கம எம்.பி. மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments