கோத்தாவிற்காக அங்கயன் இன்றும் பிரச்சாரம்!


கோத்தபாய ராஜபக்சவிற்கு  ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளை இன்றைய தினமும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தரப்பு முன்னெடுத்தமை தொடர்பில் புகாரிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியிலுள்ள தனது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கான பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை விசாரணை செய்யச் சென்ற தேர்தல் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்கு முறையிடப்பட்டிருந்தது. அங்கு இளையோருக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக சிலர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்குட்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலைய அதிகாரி அங்கிருந்த அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்து விசாரணைகளை முன்னெடுத்தார். எனினும் தேர்தல் அதிகாரியின் கடமைக்கு அங்கிருந்தவர்கள் இடையூறு விளைவித்ததுடன், அலைபேசியில் அழைப்பு எடுத்த ஒருவர் ஆட்சி மாறினால் உம்மைத் தூக்குவோம் என அச்சுறுத்தியுள்ளார்.

இதனிடையே இவை தொடர்பில் தகவல்களை திரட்டிய உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் மிரட்டப்பட்டுள்ளார்.

No comments