தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் எப்போது?

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு இன்னும் 8 மணித்தியாலத்திற்கும் குறைந்த காலப்பகுதியே உள்ளது.

நாளை காலை 7 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை நாளை (16) நள்ளிரவிற்கு முன்னதாக வழங்க முடியும் எனவும் பெரும்பாலும் அது இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவாக இருக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தொகுதிவாரியான முடிவுகளின் முதலாவது முடிவை (17) அதிகாலை 2 மணிக்காவது வழங்க முடியும் என்றும் காலை 8 மணியாகும்போது அரைவாசிக்கும் மேல் முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

No comments