ஜனாதிபதியை வடக்கே தீர்மானிக்கும்!


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் வடக்கு வாக்களிப்பே தாக்கத்தை செலுத்துமென இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக தென்னிலங்கையில் வாக்களிப்பு வித்தியாசம் குறிப்பிட்டு சொல்லத்தக்கதாக இருக்கமாட்டாதென தெரியவருகின்றது.ஆகக்கூடியது இருதரப்பிற்குமான வாக்கு வித்தியாசம் சுமார் இரண்டு இலட்சம் வரை இருக்கலாமென கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு வாக்குகள் கூடிய தாக்கத்தை செலுத்துமென தெரியவருகின்றது.

2015ம் ஆண்டைய தேர்தல் போன்று மைத்திரி பெற்ற வாக்குகளை வடக்கிலும் பெற்றால் சஜித்தின் வெற்றி உறுதியாகுமென அத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே கொழும்பை மையமாக வைத்து போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுவருகின்றது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முதல் கொண்டு பல்கலைக்கழக கருத்துக்கணிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொருட்களது விலையேற்றமென பல வதந்திகள் பரப்பப்பட்டுவருகின்றது.

No comments