கருணாவுக்கும் வெள்ளையடிப்பு:றோ பிபிசி தமிழோசை!


இந்திய றோவின் டெல்லி தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பிபிசி தமிழோசை தற்போது இன அழிப்பின் பங்காளிகளிற்கு வெள்ளை அடிக்க தொடங்கியுள்ளது.

முன்னாள் வடமாகாண அமைச்சராக இருந்த அனந்தி வறுமையில் வாழ்வதாகவும் பஸ்ஸில் வேலைக்கு செல்வதாகவும் கதை விட்ட பிபிசி தமிழோசை தற்போது கருணா விடுதலைப்போராட்டத்திற்கு துரோகமிழைக்கவில்லையென கதை அவிழ்த்துவிட்டுள்ளது.

ஆனால் அதே அனந்தி தனது கிராமத்தில் பிரபல மீற்றர் வட்டிக்கு வழங்கும் ஒரு நபராக மாறியிருப்பதாக தற்போதும் அவரோடு இணைந்து செயற்படும் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது சுமார் 3000 இற்கும் மேற்பட்ட தனது ஆட்களை கருணா வடக்கில் படை முகாம்களில் தங்க வைத்து புலிகளிற்கு எதிராக யுத்தத்தை வெற்றி கொள்ள இராணுவத்திற்கு உதவியதை மூத்த இலங்கை இராணுவ அதிகாரியொருவர் நினைவுகூர்ந்தார்.

எனினும் வெற்றியின் பின்னராக அவர்கள் அநாதரவாக கைவிடப்பட்டு தற்போது கூலி தொழிலாளிகளாகவும்,வறுமையில் வாழ்வதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தற்போது பிபிசி தமிழோசைக்கான செய்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரசாத் எனும் நபர் மலையக பின்னணியினை சேர்ந்தவர்.அவருக்கு விடுதலைப்போராட்ட சூழல் ஊடகத்துறை பற்றியே தெரியாது.
அவரே முட்டாள்கள் போன்று இவ்வாறு டெல்லி நிகழ்ச்சி நிரலில் வெள்ளையடிப்பதில் மும்முரமாகியிருப்பதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments