இராணுவ அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

கிரிதலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேணல் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் 9 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக, நாதங் என அழைக்கப்படும் ஆர்எம்டிகே ராஜபக்ஸ, சுரேஷ் என அழைக்கப்படும் வடுகெதர வினி பிரியந்த டிலன்ஜன் உபசேன, ரஞ்சி என அழைக்கப்படும் சமிந்த குமார அபேரத்ன, தனுஷ்க குணரத்ன, ஐயாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் ரிஈஆர் பீரிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவிற்கு அமைய பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

No comments