மட்டக்களப்பில் சில பகுதிகள் மூழ்கியது

நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சில வீதிகளிலும் மழை நீர் ஊடறுத்து செல்வதால், பிரயாணிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, போரதீவு, பொறுகாமம் மற்றும் பழுகாமம் போன்ற இடங்களிலுள்ள குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் உறுகாமம், உன்னிச்சை, நவகிரி, மற்றும் கடுக்காமுனைக்குளம் உள்ளிட்ட பெரிய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளன.No comments