ஒட்டுசுட்டான் படுகொலை நினைவேந்தல்


முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் கடந்த 1990ம்ஆண்டு, நவம்பர் மாதம், 27ம் திகதியன்று இலங்கை இரணுவத்தினரின் விமானக் குண்டுத் தாக்குதலின் மூலம், 11 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இன்றைய தினம் (27) இடம்பெற்றன.

வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது, ஒட்டுசுட்டான் சிவன் கோவிலுக்கு முன்பா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

இந்த படுகொலைச் சம்பவத்தின் போது தந்தையையும், சகோதரரையும் இழந்த கண்ணன் என்பவர் பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததுடன், படுகொலைச் சம்பவத்தில் மரணித்தவர்களின், உறவினர்கள் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களாலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், ஒட்டுசுட்டன் பகுதி வர்த்தகர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments