இரண்டாவது நாள் தபால் வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதல் நாள்  நேற்று, மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே இன்று இரண்டாவது நாள் தபால் மூல வாக்குப்பதிவு, பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தபால் வாக்காளர்கள் இன்றும் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும்  04ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்குப்பதிவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments