பல இலட்சம் பெறுதியான பீடி சுருள் கைப்பற்றல்

திருகோணமலை- சேருநுவரயில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 2 இலட்சத்ததிற்கும் அதிக பெறுமதிவாய்ந்த பீடி வகை புகையிலைச் சுருள்களை மது வரித்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் மூவரை மது வரித்திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட மது வரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 30,000த்திற்கும் அதிக புகையிலை பீடிச் சுருள்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
புகையிலை விற்பனைச் சட்ட மீறல் எனும் அடிப்படையில் குறித்த பெருந்தொகை பீடி வகைச் சுருள்கள் கைப்பற்றப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

No comments