பொலிஸார் தேர்தல் பிரச்சாரம் செய்தனரா? இல்லையா?

பொலிஸ் அதிகாரிகள் இருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், யாழ் – கோட்டை பகுதியில் கடந்த 28ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அந்த பிரதேசத்திற்கான வீதி பாதுகாப்பு, உயர்ந்த கட்டட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் என்பவற்றுக்காக இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் யாழ் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரஷாந் பெர்னான்டோ ஆகியோரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரசாரக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த வேட்பாளர் இந்த பொலிஸ் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது, அதனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்திருந்த நபர் ஒளிப்படம் எடுத்து ‘பொலிஸ் அதிகாரிகள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொய்யான செய்தியை பரப்பியிருக்கிறார்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக இவ்வாறு பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments