முரளி மறுப்பு:வெற்றிடமாக வடக்கு ஆளுநர் பதவி!


யுத்த வெற்றிகளை பெற்றிருந்த கோத்தபாய வடக்கிற்கான ஆளுநர் ஒருவரை நியமிக்கமுடியாது திண்டாடிவருகின்றார்.வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றிருக்கவில்லை.

நேற்றிரவு முத்தையா முரளிதரனை அழைத்து கோத்தபாய பேச்சுக்களை நடத்திய போதும் வடமாகாண ஆளுநர் பதவி தொடர்பில் அவர் ஆர்;வம் காட்டவில்லையென தெரியவருகின்றது.அவர் தேசிய மட்டத்திலான கௌரவ பதவியொன்றை எதிர்பார்த்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வடமாகாண ஆளுநர் நியமனம் இழுபறிப்பட்டே செல்கின்றது.

No comments