டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மூடல்

வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இன்று(வியாழக்கிழமை) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் சில மாணவர்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத் திணைக்களத்தினால் பாடசாலை சூழல் அவதானிக்கப்பட்டதன் அடிப்படையில் பாடசாலையில் டெங்கு நுளம்பு பெருகும் பகுதிகள் சுகாதாரப் பகுதியினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சூழலை டெங்கற்ற பிரதேசமாக மாற்ற சுகாதார செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால் இன்றைய தினம் பாடசாலையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments