பஸ் மீது கல் வீச்சு; மூவர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த பஸ் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்திய கல்வீச்சில் பஸ்சில் பயணித்த இராணுவச் சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்தனர்.
பங்கதெனிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த லுனு ஓயா என்ற இடத்தில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் வந்த நபர்களாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments