ஊடகவியலாளர் மீது கத்திக் குத்து! அராஜகம் ஆரம்பமா?

காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று (14) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகவியலாளரான லசந்த விஜேரத்ன ஊழலுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினராவார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மீபே பகுதியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு பிரவேசித்த மூவர் கொண்ட குழு ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவிக்கு துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழுவில் ஒருவர் ஊடகவியலாளரின் கையிலும் வீட்டின் மீதும் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இலஞ்ச ஊழல் தொடர்பில் லசந்த எழுதிய புத்தகம் ஒன்று தொடர்பிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments