என்னை நம்பாவிட்டால் எனது விடுதலை காரணத்தை நம்புங்கள்

எனக்கு இரண்டாவது வாழ்க்கை தாருங்கள். யுவேனியை திருப்பிக் கொடுக்க முடியாது. அவரது குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் சிறையில் அடைக்கப்பட்ட அதே 19 வயதுடையவன் இல்லை. மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னை நம்ப மாட்டிர்கள். குறைந்தபட்சம் எனது விடுதலை எந்த வற்புறுத்தல், செல்வாக்கின் விளைவினாலும் நடக்கவில்லை என்பதை நம்புங்கள்.

இவ்வாறு சுவிடன் மாணவி யுவேனியை கொடூரமாக கொலை செய்து மரண விதிக்கப்பட்டு பின்னர் அண்மையில் ஜனாதிபதி சிறிசேனவால் பொது மன்னிப்பில் விடுதலை பெற்ற ரோயல் பார்க் கொலையாளி ஜுட் ஜயமஹா இலங்கை மக்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், மேலும்,

நான் தவறு இழைத்தேன். அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ஆனால் நான் திருந்தியிருக்கிறேன். நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பைத் தாருங்கள்.

எனது விடுதலை கடந்த மூன்று வருட காலம் பரிசீலிக்கப்பட்டு வந்தது. அது இப்போது எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல. அதில் அழுத்தங்கள் எதுவும் இல்லை. தினசரி அரை மணி நேரம் சூரிய ஒளியை பார்த்து மிகுதி நேரம் சிறைக்குள் இருந்து கல்வி பயின்று கடந்த 15 வருட காலம் என்னை நான் வருத்தி திருத்திக் கொண்டேன்.

யுவேனி என் மனதிலிருந்து நீங்க மாட்டார். அவரின் குடும்பத்திடம் பாவமன்னிப்பு கேட்க முயற்சித்தாலும் அதற்கு சாத்தியம் ஏற்படவில்லை. - என்றுள்ளது.

No comments