ஆயிரமாவது நாளையொட்டி பிரான்சில் கவனயீர்ப்பு ;

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 1000 நாட்கள் எட்டியதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு லாச்சப்பல் பகுதியில்  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்  கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (15.11.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சில் அசாதாரண காலநிலை நிலவுகின்ற போதும் கடும் குளிர், மழை என்பவற்றுக்கும் மத்தியில் இந்தக் கவனயீர்ப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு  தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)

No comments