பிரான்சில் நிலநடுக்கம்! அணுஉலைகள் இடைநிறுத்தம்;

பிரான்ஸ் நாட்டின் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 30 வீடுகள் சேதமடைந்தன.
அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியான மாண்டிலிமார் என்ற நகரத்தின் அருகில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் கூறியிருப்பதாவது: நில நடுக்கத்தால் 3 பேர் காயமடைந்தனர். 30 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. பல வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் காரணமாக லியான், மாண்ட்பில்லியர், அவிக்னான் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டன.

அப்பகுதிகளில் இருந்த 250க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. அங்குள்ளவர்கள் பாதுகாப்புக்காக அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 17 அடி நீளம் கொண்ட சுவர் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரான்சில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரான்ஸில் மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பிரான்ஸ் அணு உலைகள் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments