கூட்டமைப்பின் கம்பரெலிய பல்லிளிக்கிறது?


கூட்டமைப்பின் அடுத்த தேர்தலிற்கான துருப்பு சீட்டான கம்பரெலிய பல்லிளிக்க தயாராகின்றது.

சுமார் ஒரு மாதத்திற்கு கூட தாக்குப்பிடிக்க முடியாத கம்பரெலிய வீதிகள தொடர்பில் சமூக ஊடகங்கள் அம்பலப்படுத்திவருகின்றன.

திருவையாறு, கிளிநொச்சியில் ஒரு மாதத்திற்கு முன்பு (கம்பரெலிய) ஊரெளிச்சித்திட்டத்தினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் புனரமைக்கப்பட்டு ஒரு மாத காலம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முற்றிலும் சேதமடைந்த வீதியின் தற்போதைய நிலை தான் இப்படத்தில் உள்ளது.

ஏற்கனவே கம்பரெலிய முறைகேடுகள் பற்றி அம்பலப்படுத்தப்பட்டுவரும் நிலையில் கைவிடப்பட்ட வீதி பற்றிய புகைகப்படங்கள் வெளிவந்துள்ளது.

No comments