சிறுவனை மீட்க குழி தோண்டுவதில் பெரும் சிக்கல்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி வீழ்ந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் 46 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

சிறுவன் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரிக் இயந்திரம் மூலம் இதுவரை 38 அடி வரை தோண்டப்பட்டுள்ளது.

எனினும் பாறை இருப்பதால் பாறைகளை துளையிடும் ரிக் இயந்திரம் ஒன்று கரூரில் இருந்து கொண்டுவரப்பட்டு பாறையினை உடைத்து குடையும் வேலை இடம்பெறுகின்றது. இதில் 5 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்மூலம் 96 அடி வரை தோண்டப்படவுள்ளது. பின்னர் தற்போது வந்து கொண்டிருக்கும்  3 மடங்கான  120 நியூற்றோன் வலுக்கூடிய ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கப்படவுள்ளது. .

No comments