ஏறாவூரில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் களுவங்கேனி நீரோடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

களுவங்கேனி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராகிய மாரிமுத்து ராகினி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனின் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல்போயிருந்த நிலையில், இவ்வாறு  சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments