சுஜித் நலமுடன் மீட்க யாழ்ப்பாணத்தில் பிரார்த்தனை;

தமிழ்நாடு திருச்சி மாவட்டம் மணற்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டிக் கிராமத்தில் கைவிடப்பட்டிருந்த ஆள் கிணற்றுக்குள் அறியாமல் சிக்கிக் கொண்ட சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து யாழ்ப்பாணம் வலிகாம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப்பலரும் ஒன்று கூடி மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

No comments