முதலில் கேட்கட்டும்:பிறகு தருவது பற்றி பேசலாமாம்?தமக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் முதலில் பகிரங்கமாக கேட்கட்டும்; தருவதற்கு எம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை கொள்கை அறிக்கையாகமும் பகிரங்கப்படுத்துவோம்; அதன்பிறகு என்ன செய்யலாம் என்பதை நாம் கூடிக் கதைக்கலாம் என மகிந்த தெரிவித்ததாக கோத்தாவுடன்
டீல் போட்டுள்ள புளொட் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று, காலைஉணவு விருந்துக்கு தான் அழைத்திருந்த தமிழ் ஊடக ஆசிரியர்களுள் ஒருவர் 'தமிழ் கூட்டமைப்புக்கு அல்லது தமிழர் தரப்புக்கு ழுத்தில் ஏதும் வாக்குறுதி வழங்குவீர்களா?' என்று கேட்டதற்கு, மஹிந்த இவ்வாறு பதிலளித்துள்ளார். 

அதேவேளை கடந்த வாரம் என்னை சந்தித்து கதைத்த சுமந்திரன், 'வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக சஜித்திற்கு எந்த அறிவும் கிடையாது' என்று என்னிடம் சொன்னார்.' எனவும் புளொட் பிரமுகர் தெரிவித்துள்னார்.

அண்மையில் சித்தார்த்தன் சகிதம் கோத்தாவை சந்தித்திருந்த குறித்த பிரமுகர் பின்னர் அதனை மறுதலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments