"நந்திக்கடல் பேசுகிறது" ஆவண நூல் வெளீயீடு

ஊறுகாய் இணைய ஊடகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட, பின் போர்காலத்தை எழுத்தாவணமாகக் கொண்ட "நந்திக்கடல் பேசுகிறது" நூல் வெளியீடு இன்று (13) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் 'மேஜர் சோதியா' அவர்களின் தாயார் நிகழ்வின் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததுடன், நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரகுராம், முன்னாள் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன் ஆகியோர் காரண உரைகளை நிகழ்த்தினர். மேலும் அருட்தந்தை இ.ரவிச்சந்திரன் அடிகளார் வெளியீட்டுரை ஆற்றினார்.













No comments