ஆறுமுகம் தொண்டமான் கோத்தாவுடன்?


ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவின் தரகராக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான தற்போது பகிரங்கமாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13) அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில, இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments