சிவாஜிக்கு அதிகரிக்கும் ஆதரவு?


ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கான 
ஆதரவு அதிகரித்து வருகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின்(தமிழீழ விடுதலை இயக்கம்) தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஐpலிங்கம் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் வகையில் கட்சியின் யாழ். மாவட்டக் குழுக் கூட்டம் நேற்றுச் சனிக்கிழமை(12) நடாத்தப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் எம்.கே. சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரெலோவின் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் வடமாகாண உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது ஏற்றுக் கொள்ளாத விடயம். எனவே, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு சிவாஜிலிங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ்மக்களின் தீர்வு விடயத்தில் உறுதியான தீர்வுகளை இதுவரை முன்வைக்காத நிலையில் சிவாஜிலிங்கத்தின் முடிவு சரியானது எனவும், அவருக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது எனவும் மேற்படி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கக் கூடாதெனவும் விந்தன் கனகரத்தினம் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (13) வவுனியாவில் நடைபெறவுள்ள நிலையில் ரெலோவின் யாழ். மாவட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கட்சியின் தலைமைக்குத் தெரியப்படுத்தப்படவுள்ளது.

No comments