லெப்.கேணல். திலீபன் 2ஆம் லெப்.மாலதி ஆகியோரின் வணக்க நிகழ்வு-யேர்மனி!


தமிழீழ விடுதலைப்போரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா. விடுதலையில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அக்கா .கேணல் சங்கர் அண்ணா .லெப்.கேணல் விக்ரர் அவர்களின்  வணக்க நிகழ்வு யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் இன்று 12.10.2019

மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நினைவெழச்சி நிகழ்வு. வூப்பற்றால் பிரதிந்தி ம.சுரேஸ் அவர்களால் மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.தேசியக் கொடியேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் தா.சிறிரவி அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. லெப்.கேணல் திலீபன்  அண்ணா 2ம் லெப்டினன் மாலதி அக்கா கேணல் சங்கர் அண்ணா அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. 


சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து இந் நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி சுடர் வணக்கதுடனான வீர வணக்கத்தைச் செலுத்தினார்கள். அத்தோடு பல கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.விடுதலை செயல்பாடுகள் தொடர்பான சிறப்புரை மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

தொடர்ந்து விடுதலைப்பாடல்கள், விடுதலை நடனங்கள், நினைவுரை, கவிதை, பேச்சு பேன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.தேசிய கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவேறியது.


No comments