மகேஸ் சேனநாயக்க வைத்தியசாலையில் அனுமதி


முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சில மணி நேரங்களில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

No comments