கோத்தாவுக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்ப்பாணம் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஐநா அமைதிப்படை வர வேண்டும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று,  கோத்தாவை கைது செய், எங்கள் உறவுகள் எங்கே, சர்வதேசமே உடனடியாக கோத்தாவை கைது செய் ஆகிய கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.No comments