விபத்தில் சேதமடைந்த அமைச்சரது வாகனம்?

வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய வாகனம் விபத்தில் சிக்கி முற்றாக சிதைவடைந்து கைவிடப்படும் நிலமையை எட்டியுள்ளது
வடக்கு மாகாணசபைக்கு 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதன் முதலாக தேர்தல் இடம்பெற்று சபை ஆரம்பிக்கப்பட்ட சமயம் 5 அமைச்சர்களிற்கும் புதிதாக வாகனம் பொள்வனவு செய்யப்பட்டது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் அமைச்சர்களின் பாவனையில் இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதியுன் முதலாவது மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்றது.
இவ்வாறு ஆட்சிக்காலம் நிறைவுற்ற சமயம் சகல அமைச்சர்களும் தமது பாவனைநில் இருந்த வாகனங்களை பி்தம செயலாளர் மற்றும் அமைச்சுக்களில் கையளித்திருந்தனர். இந்த நிலையில் முதலமைச்ச் பயன் படுத்திய வாகனம் மாநகர முதல்வர் ஆனல்ட்டின் பயன்பாட்டிற்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய வாகனம் வடக கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பயன்பாட்டிற்குமா வழங்கப்பட்டிருந்தது.
 இந்த நிலையில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பாவனையில் இருந்த வாகனம் கடந்த 17ம் திகதி மருதனார்மடம் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழுமையாக அழிவடைந்து மீளப் பயன்படுத்த முடியாத நிலமைக்குச் சென்றுள்ளது.

No comments