கிழக்கில் தமிழர் நிலம் பாதுகாக்க கோத்தாவை ஆதரியுங்கள்

கிழக்கு மாகாணத்தின் நில, நிர்வாக, பொருளாதாரத்தினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமானால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களிக்கவேண்டுமென  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான செல்வி மனோகர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (21) மாலை நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பினை சேர்ந்த சின்னத்தம்பி வரதராஜனின் உதவியுடன் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திராய்மடு சுவிஸ் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள 50மாணவர்களுக்கு இதன்போது கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியப்போதே மனோகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த  நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சுஜிகலா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments