இந்திய தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

யாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

அதற்கமைய நாளை (23) இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது மேலும் தெரிவித்த மீனவர்கள், சீன பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக, இந்திய கடற்படை பாக்கு நீரிணையில் சரமாரியான கைதுகளை மேற்கொண்டது. இந்தியாவிற்குள் ஊடுருவலாமென்ற சந்தேகத்தில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 18 யாழ்ப்பாண மீனவர்கள் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனை கண்டித்தும் அவர்களை உடன் விடுவிக்க வலியுறுத்தியும் நாளை யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

No comments