வாக்குச்சீட்டா?தாயத்தா?அல்லாடும் மகிந்த கும்பல்!


உலகம் விஞ்ஞானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் மகிந்த தரப்போ இப்போதும் சாத்திரம்,செய்வினையனெ தெற்கை மூடநம்பிக்கைக்குள் தள்ளிவருகின்றது.

விடுதலைப்புலிகளது தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள பாடுபட்ட போது மகிந்த முதல் பசில்.நாமல்.கோத்தா என அனைவரும் பிரபல கேரள செய்வினை வல்லுநர்களது அங்கிகள் மற்றும் தாயத்துக்களுடன் வலம் வந்திருந்தனர்.

தற்போது தேர்தல் களத்தில் அந்த வருத்தம் உச்சம் பெற்றிருக்கின்றது.

மகிந்த கழுத்தில்,கையில் ,இடுப்பில் என தாயத்துக்களுடன் வலம் வரும் காட்சிகளை தென்னிலங்கை ஊடகங்கள் நையாண்டி செய்ய தொடங்கியுள்ளன.

தோல்வி பயத்தில் மகிந்த கும்பல் வாக்காளர் அட்டைக்கு பதிலாக தாயத்துடன் திரிவதாவென அவை கேள்வி எழுப்பியுள்ளன.

No comments