தமிழருக்கு சிறந்த எதிர்காலத்தை காட்டுவாராம் வவுனியாவில் கோத்தா

"தமிழ் மக்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். உங்களின் சில அரசியல் கட்சிகள் உங்களது கடந்த காலத்தை கிளறுகின்றது. ஆனால் நான் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை காண்பிப்பேன். சௌபாக்கியத்தை பெற்றுத் தருவேன்"

இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (28) வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும்,

சுதந்திரத்தின் பின்னர் பல தலைவர்கள் உங்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் நான் செய்யக்கூடிய வாக்குறுதிகளை வழங்குகிறேன்.

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு, வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு, உங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எமக்குப் பலத்தை தாருங்கள்.

உங்களுக்கு தெரியும் அன்று புலி உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். அவர்களுக்கு புணர்வாழ்வு  கொடுத்தோம். உலகில் மிகத் தரமான புணர்வாழ்வு நிலையம் இலங்கையில் காணப்பட்டது. அவர்களை சமூக மயப்படுத்தினோம். சிவில் பாதுகாப்பு படையில் இணைத்தோம்.

அதுபோல் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை கொடுப்போம்.

ஸ்ரீலங்கா என்ற நாட்டில் அனைவரும் சந்தேகமின்றி, அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவேன் என்பதை உறுதிபடக் கூறுகிறேன். - என்றார்.

No comments