பொலிஸார் கொலை செய்த கஜன் - சுலக்சன் நினைவேந்தல்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக்கழத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (20) காலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் ந.கஜன், ப.சுலக்சன் ஆகியோரின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளே இன்று இடம்பெற்றன.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
No comments