சிங்கள இளைஞர்கள் யாழ்.பிரச்சாரத்தில்?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவிற்காக பிரச்சாரங்களை முன்னெடுக்க தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள் யாழ்ப்பாணத்திற்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வசதி வாய்ப்புக்களை கொண்ட விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களிற்கு மதுபான இலவச விநியோகத்திற்கு கொழும்பு நிறுவனமொன்று பொறுப்பேற்றுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ் மக்களை பொறுத்த வரையினில் கோத்தபாய வரக்கூடாதென்ற நிலைப்பாட்டுடன் செயற்படுகையில் மறுபுறம் எவ்வாறேனும் வாக்குகளை அறுவடை செய்ய முன்னாள் ஆளுநர்கள் என பலரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனுடன் ஆளுநர்கள் மற்றும் பொதுஜனபெரமுனவுடன் ஆட்கள் இருப்பது போன்று காண்பிக்க ஏதுவாகவே தென்னிலங்கை இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றனர்.

ஊடக செய்திகளில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் இத்தரப்புடன் இருப்பதாக காண்பிக்கப்படுகின்ற போதும் அவர்கள் அனைவரும் சிங்கள இளைஞர்களேயாவர்.
ஆனால் உள்ளுர் மக்கள் இவ்வளவு பேர் திரண்டிருக்கின்றனர்.கோத்தாவிற்கு ஆதரவு அதிகரித்திருக்கின்றதென்ற பிரச்சாரத்தினை முன்னெடுக்கவே இத்தகைய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 
இதனிடையே பிரச்சார நடவடிக்கைக்கென களமிறக்கப்பட்ட தென்னிலங்கை இளைஞர்கள் அருகாகவுள்ள பொதுமக்கள் வீடுகளுள் பாய்ந்துவருவதாக மறுபுறம் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

No comments