மன்னார் நகர சபையின் 20வது அமர்வு நடைபெற்றது

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்குகின்ற மழை நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது.
மன்னார் நகர சபையின் 20ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த அமர்வின் போதே நகர சபை உறுப்பினர்கள் குறித்த கோரிக்கையினை முன்வைத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
எனவே குறித்த மழை நீரை வெளியேற்றும் வகையில், வடிகானமைப்புக்கள் சீர் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் நகர சபை உறுப்பினர்கள் என்ற வகையில் எங்களிடம் தமது பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
எனவே, நாங்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதேவேளை வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்றைய சபை அமர்வில் கலந்துரையாடப்பட்டது.

No comments