டக்ளசும், தாெண்டமானும் சுதந்திரக் கட்சியை தான் ஆதரிப்பார்கள்: தயா

ஜனாதிபதித் தேர்தலின்போது, ஈ.பி.டி.பி. மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினரும், தொண்டமானின் கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்தான் இணையவுள்ளார்கள்.

சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கே அவர்கள் ஆதரவளிப்பார்கள். தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் தொடர்பாக நாம் விமர்சிக்க முடியாது.

எமக்கு கட்சியின் நிலைப்பாடு தான் அவசியமாக இருக்கிறது. அதேபோல், நாமும் தனிப்பட்ட முடிவுகளை இந்த விடயத்தில் எடுக்க முடியாது.

கட்சியின் மத்தியக் குழுவும், உயர்மட்டக்குழுவும் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்.” என கூறினார்.

No comments