200 ஆண்டுகள் பிரித்தானியாவின் ஆட்சிக்கு,நஷ்டஈடு கேட்கும் இந்தியா!

இந்தியாவை ஆட்சிசெய்த 200 ஆண்டுகளில் மொத்தம் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான செல்வத்தைக் பிரித்தானியா கொள்ளையடித்துள்ளது  என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அட்லாண்டிக் கவுன்சிலில் பேசியுள்ளார்.

2 நூற்றாண்டுகளாக மேற்குலகினால் இந்தியா அவமானங்களை சந்தித்து என்றும்,செல்வத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 18ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவிற்குள் நுழைந்த அவர்களின் சுரண்டல், அடுத்த 190 ஆண்டுகள் தொடர்ந்தது என்று கூறிய அவர்.

தனது கருத்துக்கான ஆதாரமாக பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக் மேற்கொண்ட ஆய்வை எடுத்துக்காட்டினார். அந்த ஆய்வின்படி இந்தியாவை ஆட்சிசெய்த காலங்களில் பிரிட்டிஷார் உறிஞ்சிய தொகை 446 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த ஆய்வறிக்கை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்தியாவில் நிகழ்த்திய பொருளாதார சுரண்டல்கள் குறித்து விரிவான முறையில் புத்தகம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரிட்டன் இந்தியாவிற்கு ஏன் நஷ்டஈடு தரக்கூடாது என்றும் அவர் வாதம் செய்திருந்தார்.

No comments