பாலியல் சேட்டை செய்தவரை ஐஸ் குச்சியால் குத்தி தப்பித்துகொண்ட சிறுமி!
மலேசியாவில், 11வயது சிறுமி ஒருவர் தனியார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அதன் ஓட்டுனர் சிறுமியை போகுமிடம் செல்லாது தவறான இடமான தெம்போக் பனுவாசா (Tembok Panuwasa) எனும் பகுதிக்கு அழைத்து சென்ற அவர் வாகனத்தைத் திடீரென்று நிறுத்தி சிறுமியின் கைகளைப் பிடித்து தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
'ஐஸ்' குடித்துகொண்டிருந்த சிறுமி அந்த நபரை ஐஸ் உள்ளே இருக்கும் குச்சியால் கண்ணை குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. பின்பு உதவி தேடி ஓடிய சிறுமியைப் பொதுமக்கள் அவருடைய பாட்டியிடம் அழைத்துச் சென்றனர்.
காவல்துறை தற்போது அந்த வாகனம் ஓட்டிய நபரைத் தேடிவருகிறது.
Post a Comment