சென்னையில் சர்வதேச திரைப்பட விழா பணிகள் ஆரம்பம்;


தமிழக  அரசின்  முழுமையான ஆதரவுடன் இந்தியத் திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடாத்தவுள்ள சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் மாதம் 12-ம்  தேதி  முதல்  19-ம்  தேதிவரையில்  சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவுக்கான விளம்பர பதாகை  வெளியீட்டு நிகழ்ச்சி  சென்னையில் நடைபெற்றுள்ளத.  இந்த விழாவில்  தமிழக  செய்தி  மற்றும்  விளம்பரத்  துறை  அமைச்சர்  கடம்பூர் ராஜூ, இந்தியத்  திரைப்பட  திறனாய்வு  கழகத்தின்  ICAF  தலைவர்  கண்ணன்,  துணைத் தலைவர்  இராமகிருஷ்ணன்,  பொதுச்  செயலாளர்  தங்கராஜ்,  பிலிம்  சேம்பர்  தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோ, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.
உலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குநர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகிய பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.
தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை இந்திய ரூபாய் 6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு பரிசுத் தொகை இந்திய ரூபாய் 1 லட்சமாகவும் இருக்கும்.
இந்த நிகழ்வில் திரைத்துறை  பிரபலங்களான  இயக்குநர் நடிகர்  பார்த்திபன்,  நடிகைரோகிணி, இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments