கிளிநொச்சியிலும் நீதி கோரிய போராட்டம்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரைத் தொலைத்த சிறுவர்களின் உரிமைகளுக்காகவும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரமான காலை-10 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பிள்ளையார் ஆலயம் முன்னாலும், கிளிநொச்சி - பசுமைப்பூங்கா முன்றலிலும், முல்லைத்தீவு மாவட்டச் செயலக முன்றலிலும், மன்னார் மாவட்டச் செயலக முன்றலிலும், வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாகவும், திருகோணமலை பிரதேச செயலகம் முன்பாகவும், மட்டக்களப்பில் காந்தி பூங்காவிலும், அம்பாறையில் பிரதானவீதி தம்பிலுவில்-02 இலும் எழுச்சிப் போராட்டங்கள் இடம்பெற்றன.
சிங்கள வல்லாதிக்க அரசாலும், இலங்கை அரச படைகளாலும் பெற்றோருடன் சேர்த்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இன்றைய சிறுவர்களின் நிலை என்ன?, எமது குழந்தைகள் எங்கே?, வலியவர்களுக்கு மட்டுமே நீதியா?, இலங்கை அரசே பதில் சொல்லு!, சர்வதேசமே தலையிட்டு எமக்கான நீதியைப் பெற்றுக் கொடு! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்படது.
மேற்படி போராட்டத்தில் மதகுமார்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இதன்போது, வடக்கு கிழக்கு காணமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி லீலாவதியால் ஐக்கிய நாடுகளிடம் கையளிக்குமாறு பங்குத்தந்தையிடம் மகஜர் கொடுக்கப்பட்டது. அத்துடன் 29 குழந்தைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது.

Post a Comment